# இன்னும் எதுவும் நடந்துவிடவில்லை…

img_20180927_072103

தேன் உறிஞ்சும் வண்டுகளின்

கொடுக்குகள் முறியும் ஓசை

மாலை நேரங்களில் நீங்கள்

மதுக்கோப்பைகளுடன் தள்ளாடுகையில்

பின்னணியில் ஒலிக்கும் கரோக்கியாக இருக்கலாம்,

கேட்டுக்கொண்டே

இன்னும் சில மிடறுகள் விழுங்குங்கள்…

அயல்மகரந்தச் சேர்க்கையில்

கருவுறுதலுக்காக காத்திருக்கும் தாவரங்கள்

பூப்பெய்தாமலே மடியும் போது

எழும் மரணத்தின் வாசம்

உங்கள் அறையெங்கிலும் கமழும்

பெர்ப்யூமை ஒத்திருக்கலாம்,

அறையோடு நிறுத்தாமல்

உடலுக்கும் கொஞ்சம்

வாசனை தெளித்துக்கொள்ளுங்கள்…

முப்போகம் விளைந்த வயல்களின் நடுவே

மூன்று குச்சிகளை ஊன்றி

வரப்புமேடுகளை பெளண்டரி லைனாக்கி

விளைநிலங்கள் எல்லாம் விளையாட்டு நிலமான பிறகு,

மழைக்காடுகளில் ரிசார்ட்டுகள் கட்டி

தேன்நிலவில் சிற்றின்பம் பருகிக் கொண்டிருங்கள்…

நீங்கள் கவலையுறுமளவிற்கு

இன்னும் எதுவும் நடந்துவிடவில்லை…

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

வேனில் மழை…

வேனில் மாலையில் வெளுக்குது மழையே
காணும் யாவும் காட்சிப்பிழையே
நீளும் நதி தொடும் சாலைக் கடலே
மதுரையம்பதியோ வருணன் ஆடும் திடலே…

Posted in Uncategorized | Leave a comment

கூதல் விதைத்து
காதல் வளர்க்கும்
கூடல் மழை…

Posted in Uncategorized | Leave a comment

கூதல் கூட்டும்
சமத்தாகப் பொழியும்
மெளன மழை…
அவள் பயந்தணைக்க
காதல் கூட்டும்
இடி இடித்துப் பொழியும்
முரட்டு மழை…

Posted in Uncategorized | Leave a comment

எல்லோரும் அள்ளியணைக்கும்
மழை
எடுப்பார் கைப்பிள்ளை…

Posted in Uncategorized | Leave a comment

மழை எழுதும்
கவிதையின் நிறம்
பச்சை…

Posted in Uncategorized | Leave a comment

சுடச்சுட எழுதிச் செல்கிறது
மழை
மனம் விரும்பும்
ஈரக் கவிதைகளை…

Posted in Uncategorized | Leave a comment

எந்த விதை முளைத்து நிற்கும் இன்று பெய்யும் மழை குடித்து???

Posted in Uncategorized | Leave a comment

வெப்பச்சலனம்
வியர்த்து உலர்கிறது
மழை…

Posted in Uncategorized | Leave a comment

தலை நனைக்கவில்லை
தரை நனைத்த மழை…

Posted in Uncategorized | 4 Comments